தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் பயிறுக்கு காப்பீடு செய்யலாம் நாளை மறுநாள் கடைசி நாள்


தர்மபுரி மாவட்டத்தில்  விவசாயிகள் நெல் பயிறுக்கு காப்பீடு செய்யலாம்  நாளை மறுநாள் கடைசி நாள்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் பயிறுக்கு காப்பீடு செய்யலாம் நாளை மறுநாள் கடைசி நாள்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீடு

தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நெல் பயிரை காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.

இந்த திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்படும் பொது சேவை மையங்கள் செயல்படும்.

பிரிமீய தொகை

அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு பிரிமீய தொகை பெற்று கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story