விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
x

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.

சிறப்பு விருந்தினராக கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தி.சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு கிராமத்தின் வளர்ச்சியையே தீர்மானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே கிராமங்களில் என்னென்ன தேவை என்பது குறித்து அதிகாரிகளிடம் மனுவாக கொடுங்கள்.

மேலும் மலைப்பகுதியில் பணியாற்றும் வேளாண்துறை அதிகாரிகள், மக்களோடு மக்களாக இணைந்து இவர்களின் தேவை என்ன இவர்களுக்கு கைத்தொழில் வைத்து கொடுத்தால் வருமானம் பெறுமா அதற்கு என்னென்ன தேவை என்பதையெல்லாம் பார்த்து, விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story