`வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்'-குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


`வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்-குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதாக குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தென்காசி

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதாக குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்து மற்றும் மழையளவு, நீர் இருப்பு விவரம் போன்றவை வாசிக்கப்பட்டது. நெல் அறுவடை எந்திரங்கள் முன் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மனு மீது நடவடிக்கை இ்ல்லை

அப்போது, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல தலைவர் செல்லத்துரை பேசும்போது, நான் முன்பதிவு செய்கிறேன். எனக்கு இரண்டு எந்திரங்கள் வேண்டும், என்றார்.

அதற்கு அதிகாரி, இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும், என்றார்.

இன்னும் 15 நாட்கள் கழித்து கூட கொடுங்கள் என்று கூறிய செல்லத்துரை நமது மாவட்டத்தில் அறுவடை எந்திரமே இல்லை. ஏன் தவறான தகவலை கூறுகிறீர்கள்? என்று கூறினார். நான் இதுவரை 16 கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளேன் எந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.

கூச்சல்-குழப்பம்

இதன் பிறகு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணை செயலாளர் ஜாகிர் உசேன் பேசும்போது, வனவிலங்குகள் விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்கிறது, என்று கூறினார்.

(அப்போது பெரும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது).

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் பேசும்போது, விவசாய நிலத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதை தடுக்க வேண்டும், என்று கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வேல்மயில் பேசும்போது, காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், என்று கூறினார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு

தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் ராமசாமி கூறும்போது, வயல்வெளிகளில் டாஸ்மாக் மதுபானங்களை குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கிறார்கள். விவசாயிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கேரளாவில் வழங்குவது போன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்களை வழங்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, வேளாண் இணை இயக்குனர் தமிழ் மலர், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் வேளாண் அலுவலர்கள், தென்காசி மாவட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Next Story