கால்நடைகளுடன் விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்-சாலைமறியல்


கால்நடைகளுடன் விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்-சாலைமறியல்
x

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள=் மாடுகளுடன் சாலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள=் மாடுகளுடன் சாலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிப்காட் விரிவாக்கம்

செய்யாறு தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டை விரிவாக்கம் செய்ய மேல்மா, நர்மாபள்ளம், குறும்பூர், வீரம்பாக்கம், தேத்துறை, அத்தி, இளநீர்குன்றம், நெடுங்கல், வடஆளப்பிறந்தான் ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்திட உள்ளது.

இந்நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறும்பூர், மேல்மா, தேத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாகத் தெரிகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதிக்காததால் விவசாயிகள் காஞ்சீபுரம் - வந்தவாசியில் மேல்மா கூட்டுச்சாலையில் 150 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிக் கையில் கறுப்பு கொடி ஏந்தியப்படியும், சிலர் கரும்பு பயிர்களை கைகளில் பிடித்து கோஷமிட்டனர். பின்னர் நேரம் நேரம் செல்ல சாலையில் நெல் மணிகளை வாரி இறைத்தும் மூதாட்டிகள் ஒப்பாரி வைத்தும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஞ்சி காய்ச்சினர்

மேலும், மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் மாடுகளை நிறுத்தி வைத்ததோடு சாலையின் நடுவே அடுப்பு வைத்து தீ மூட்டி கஞ்சிகாய்ச்சினர். தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், செய்யாறு வட்டாட்சியர் முரளி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனி, இரவிச்சந்திரன், கார்த்திக் ஆகியோர் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள், பச்சையப்பன் மற்றும் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தார். அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போத்துவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story