மத்திய அரசின் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய அரசின் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
சாத்தூர்,
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டமானது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாய குடும்பங்களுக்கு 3 தவணையாக ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் தொடர்ந்து தவணை நிதி பெறுவதற்கு தங்களது சுய விவரங்களை அதாவது ஆதார் எண், கைபேசி எண், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று இணையதளத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தகுதியான விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி சமர்ப்பித்து சரிபார்ப்பு செய்தால் மட்டுமே தொடர்ந்து நிதி உதவி பெற இயலும். மேற்கண்ட தகவலை சாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.