நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு கேட்பதால் விவசாயிகள் வேதனை


நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு கேட்பதால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதை தடுக்க பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதை தடுக்க பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்முதல் நிலையங்கள்

நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் 171 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு திறந்துள்ளது.

அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள சில நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு பெறுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.

ரூ.40 கையூட்டு

நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கையூட்டு கொடுத்தால் தான் நெல் மூட்டையை கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் நெல் கொள்முதல் செய்யும் பணி ெதாய்வு ஏற்படுவதாகவும், மூட்டைகள் தேங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பணம் தராவிட்டால் தகராறு

இதுகுறித்து நாகை ஒரத்தூரை சேர்ந்த காளிமுத்து கூறுகையில்,

அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய சென்றால், ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது, எடை குறைவாக உள்ளது என பல்வேறு காரணங்களை காட்டி ரூ.30 முதல் ரூ.40 வரை கையூட்டு கேட்கின்றனர்.

பணம் கொடுக்கவில்லை என்றால் நெல்லை கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டுகின்றனர். தட்டி கேட்டால் தகராறு செய்கின்றனர்.

வியர்வை சிந்தி, விவசாயம் செய்து பல்ேவறு இடர்பாடுகளுக்கு இடையே நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தால், நெல்லை கொள்முதல் செய்ய நடக்கும் வசூல் வேட்டையை பார்க்கும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது.

பறக்கும் படை அமைக்க வேண்டும்

விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கையூட்டு பெறுவதை தடுக்க அதிகாரிகள் பறக்கும் படை அமைத்து அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று கண்காணிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நாகை அகர ஒரத்தூரை சேர்ந்த தியாகராஜன் கூறுகையில்,

தமிழக தமிழக அரசு கொள்முதல் நிலையங்களில் எவ்வித கையூட்டும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளும், விவசாயிகளிடம் கையூட்டு பெற கூடாது என்று எச்சரித்து வருகின்றனர்.

நடவடிக்கை

இருந்த போதிலும் கொள்முதல் நிலையங்களில் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 கையூட்டு பெறுவது தவிர்க்க முடியாததும், தொடர் கதை போலாவும் நடைபெற்று வருகிறது. இதனால் சிறு,குறு விவசாயிகள் பெரும் கஷ்டம் அடைகின்றனர். எனவே கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story