மழையால் நெற்பயிகள் சாய்ந்தன விவசாயிகள் கவலை

மழையால் நெற்பயிகள் சாய்ந்தன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், ஆதமங்கலம், எடமணல், எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், காரைமேடு, புங்கனூர், நிம்மேலி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் கடந்த சில நாட்களாக சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை

பல்வேறு ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை திறந்த வெளி நேரடி கொள்முதல் நிலைய வளாகத்திற்குள் அடுக்கி வைத்துள்ளனர்.

நேற்று அதிகாலை பெய்த திடீரென மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

நெல் மூட்டைகள் நனைந்தது

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல்களில் மழைநீர் தேங்கியதால் அறுவடை எந்திரங்களை வயலில் இறக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழை நீரில் நனைந்து வீணாகின.

இந்த மழையால் சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, பாரதிதாசன் வீதி, ெரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பள்ளி நேரத்தில் பலத்த மழை பெய்ததால் மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு வீட்டுக்கு சென்றனர்.

மழை அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- சீர்காழி-19, செம்பனார்கோவில்-16, கொள்ளிடம்-10, மயிலாடுதுறை -9, தரங்கம்பாடி-5, மணல்மேடு-3.

Next Story