பெருமாள்பட்டியில்விவசாயிகள் சங்க மாநாடு
பெருமாள்பட்டியில்விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் 40-வது மாநாடு நடைபெற்றது. தாலுகா விவசாய சங்க தலைவர் சிவராமன், சங்கரலிங்கம், நீதிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை நாராயணசாமி ஏற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில உதவி செயலாளர் நல்லையா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட உதவி செயலாளர்கள் பாபு, பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.
மாநாட்டில் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாலுகாவில் உள்ள அனைத்து குளங்களையும் ஆழப்படுத்தி நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். சங்க தாலுகா குழு செயலாளர் லெனின்குமார் நன்றி கூறினார்.