கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை
நெல்லை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை
திருநெல்வேலி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சொரிமுத்து, நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மடைகள், கால்வாய் மற்றும் குளங்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் கடைமடைகளுக்கு செல்லவில்லை. இதனால் விவசாயத்திற்கு இன்னும் தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி கரம்பை மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் யூரியா உரம் தொடக்க வேளாண் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கார் பருவத்திற்கு தேவையான யூரியா உரம் இல்லை. இதனால் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த யூரியா தட்டுப்பாட்டை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story