வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி


வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி
x

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

முற்றுகையிட முயற்சி

நாகை மாவட்டத்தில பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட எள், பயறு, உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யக்கோரியும் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க வட்டார தலைவர் ராஜன், செயலாளர் ஒளிச்சந்திரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சமூக நல தாசில்தார் ரவி, துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுதொடர்பாக வருகிற 4-ந்தேதி(திங்கட்கிழமை) தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மைதுறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள், கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story