நெல்கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்


நெல்கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
x

நெல்கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

மயிலாடுதுறை

குத்தாலம்

குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை மாதிரிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகன், குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story