தெளிப்பு முறை நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


தெளிப்பு முறை நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x

கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க தெளிப்பு முறை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க தெளிப்பு முறை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கோடை நெல் நடவு

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை, கோவத்தக்குடி, களஞ்சேரி, இடையிருப்பு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது கோடை நெல் நடவு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. உழவு எந்திரம், நடவு எந்திரம் என விவசாயத்தில் எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வந்தாலும் வயல்களுக்கு நீர்பாய்ச்சுதல், விதை விதைத்தல், வரப்புகளை சீர் செய்தல், நாற்று பறித்தல், நாற்றுகளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு எடுத்து செல்லுதல் போன்ற இதர வேலைகளுக்கு கூலி ஆட்கள் தேவை உள்ளது. இதற்கான ஆட்கள் கூட எளிதாக கிடைப்பதில்லை.

தெளிப்பு முறை

கூலி ஆட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிக செலவு, போன்ற காரணங்களால் விவசாயம் செய்யும் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சில விவசாயிகள் ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, அதிகரித்து வரும் உரச்செலவு என எல்லா பிரச்சினைகளை சமாளிக்க தெளிப்பு முறையில் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள்.

இதில் எம்.பி.ஏ., பொறியியல், கல்வியியல் போன்ற பட்டப்படிப்புகளை படித்த பட்டதாரி இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து கோவத்தக்குடியை சேர்ந்த பட்டதாரி விவசாயி கணேஷ் கூறியதாவது:-

4 ஆண்டுகளாக...

கோவத்தக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது கோடை நடவு நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் பகுதியில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தெளிப்பு முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக தெளிப்பு முறையில்தான் விவசாயம் செய்து வருகிறேன்.

பொதுவாக குறுவை, சம்பா, விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் தற்போது கோடை சாகுபடிக்கே கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story