மானிய விலையில் பவர் டில்லர்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


மானிய விலையில் பவர் டில்லர்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

மானிய விலையில் பவர் டில்லர்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை எந்திரம் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

39 விசை உழுவை இயந்திரம் வழங்க ரூ.33.15 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேற்படி விசை உழுவை இயந்திரம் சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி. விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் திருப்பத்தூர் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்திநகர், புதுப்பேட்டை ரோடு, திருப்பத்தூர் - 635601 அலுவலகத்தை அனுகி விண்ணப்பத்தினை சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடைலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story