கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்புக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்புக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்  கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2022 4:38 PM GMT (Updated: 30 Jun 2022 4:42 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்புக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் பாதித்தால் நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் கரும்பு பயிருக்கு வருகிற 31.08.2022-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு ரூ.2,568 ஆகும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீட்டிற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும்போது விவசாயியின் பெயர் மற்றும் முகவரி, நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story