பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயனடையலாம்


பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயனடையலாம்
x

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையலாம் என ஜோலார்பேட்டையில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையலாம் என ஜோலார்பேட்டையில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிர்காப்பீடு திட்டம்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார்.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் வாசுதேவ ரெட்டி, மாநில அளவிலான பயிர் காப்பீடு திட்ட அலுவலர் உஷா, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பயிர் காப்பீட்டின் மூலம் நிவாரணம் பெறலாம்.

கடைசி நாள்

மேலும் இந்த பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே விவசாயிகள் அனைவரும் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து பயனடையலாம் என்றார்.

இதனையடுத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் போது ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராஜா உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story