விவசாயிகள் காய்கறி கடைகள் அமைத்து பயன் பெறலாம்


விவசாயிகள் காய்கறி கடைகள் அமைத்து பயன் பெறலாம்
x

மயிலாடுதுறை உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறி கடைகள் அமைத்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பொன்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறி கடைகள் அமைத்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பொன்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உழவர் சந்தை

மயிலாடுதுறை நகரில் பூம்புகார் சாலையில் மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து தருமபுரம், அச்சுதராயபுரம் கிராமங்களில் தோட்ட பயிர் விவசாயம் செய்துவரும் விவசாயிகளை சந்தித்து உழவர் சந்தையில் காய்கறி கடைகள் அமைத்து பயன்பெறுமாறு துண்டு பிரசுரம் வழங்கினார்.

பயிர்கள்

இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் வழிகாட்டுதலின்படி கடந்த ஒரு வாரமாக உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் நடந்து வருகிறது.மயிலாடுதுறை பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரை, கீரை, கொடி வகை காய்கறிகள் மற்றும் மா, வாழை போன்ற பழவகை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயன்பெறலாம்

மயிலாடுதுறை சுற்று வட்டார கிராம பகுதிகளான மன்னம்பந்தல், மணக்குடி, மாப்படுகை, முடிகண்டநல்லூர், மணல்மேடு போன்ற கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை மயிலாடுதுறை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம்.விவசாயிகள் விளைவிக்கப்படும் காய்கறிகளை மயிலாடுதுறை உழவர் சந்தைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக அரசு பஸ்சில் எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்தி கொள்ளலாம். விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் வாடகையின்றி கடைகள் ஒதுக்கப்படுகிறது. அதோடு எடை தராசும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் மை அலுவலர் கீர்த்திகா, துணை தோட்டக்கலை அலுவலர் அறிவழகன், உதவி தோட்டக்கலை அலுவலர் ராம்பிரேம், உதவி வேளாண்மை அலுவலர் நிரஞ்சன் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story