விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்


விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-செம்பனார்கோவில் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவ நெற்பயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரதமரின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பயிர் காப்பீட்டை இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுள்ளது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச காப்பீடு தொகை ரூ.35 ஆயிரத்து 50 ஆகும். இதன்படி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பயிர் காப்பீட்டு பிரீமியம் ரூ.526 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் பிரீமியத்தை செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.வெள்ளம் புயல் போன்ற இயற்கை சிற்றங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story