தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்


தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
x
தினத்தந்தி 12 March 2023 12:21 AM IST (Updated: 12 March 2023 12:21 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

வேளாண்மை பெருவிழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், கோயம்புத்தூர் நீர்நுட்ப மையம், திருவாரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை இணைந்து வேளாண்மை பெருவிழாவை நடத்தியது.

விழாவுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி தலைமை தாங்கி பேசினாா்.

அப்போது அவர் கூறியதாவது:-

பசுந்தாள் உரம்

வேளாண்பெருவிழாவை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேளாண்மை பல்கலைக் கழகம் நெல் மற்றும் பயிறுவகை பயிர்களில் புதிய ரகங்களை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. நெல்லில் ஆடுதுறை-58, கோ-58 (மேம்படுத்தப்பட்ட கவுனி) ஆகியவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உகந்த அரிசியான வம்பன்-6 (பச்சைப்பயறு), திருச்சி-5 ஆகிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயிகள் பயன்படுத்தி லாபம் அடையலாம். 3 போகம் சாகுபடி செய்யும் வயலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதற்கு மாறாக சணப்பை மாதிரி ஒன்றை சாகுபடி செய்யலாம். ஆடுதுறை -1 சணப்பை பயிர்செய்து மடக்கி உழுவதால் வயலுக்கு 1 எக்டேருக்கு 20 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும்.

அதிக லாபம் பெறலாம்

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குதிரைவாலி பிஸ்கட் தயார் செய்ய பயன்படுத்தப் படுகிறது. குதிரைவாலி, சோளம் (கே-13), கம்பு (கோ.ஹெச்-10) போன்றவற்றை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். பாரம்பரிய அரிசியில் 25-க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை செய்யலாம். வேளாண்மை பல்கலைக்கழக்கத்தின் தொழில்நுட்பங்களை நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அவர் கூறினாா்.

விழாவில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீீ, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் மு.லெட்சுமிகாந்தன், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர்நுட்ப மைய இயக்குனர் பழனிவேலன், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் கல்லூரி முதல்வர் (ஈச்சங்கோட்டை) வேலாயுதம், வேளாண் கல்லூரி முதன்மை அதிகாரி (கீழ்வேளூர்) கோ.ரவி, நபார்டு பொதுமேலாளர் சென்னை பி.டி.உஷா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் செயல் இயக்குனர் அனுராக், கோவை களப்பணி மண்டல மேலாளர் பா.வினோத்குமார், ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் மற்றும் வேளாண் அதிகாரிகள், நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதீஸ்பாபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கண்காட்சி

வேளாண் கண்காட்சியும் நடந்தது. .முன்னதாக வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் வரவேற்றார். முடிவில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story