விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
x

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தற்போது நடப்பு சம்பா பட்டத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீடு செய்யலாம்

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பு சம்பா பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிருக்கு காப்பீடு திட்டத்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்த எச்.டி.எப்.சி. காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நெற்பயிருக்கு வருவாய் கிராம வாரியாகவும், மணிலா பயிருக்கு குறுவட்டங்கள் வாரியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன்பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு மேற்கொள்ளலாம். இதில் பயிர் கடன் பெறாத விவசாயிகள் இப்பட்டத்தில் சாகுபடி செய்துள்ள அனைவரும் பொது சேவை மையங்களை தொடர்புகொண்டு பயிர் காப்பீடு மேற்கொள்ளலாம்.

15-ந் தேதிக்குள்

மேலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப்பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் அட்டை நகல், தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆகியவற்றை சமர்ப்பித்து மேற்கண்ட ஆவணங்களில் புல எண், தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண், ஆகியவை சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்.

பின்னர் காப்பீடு செய்ததற்கான ரசீதை, பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.33 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு ஏக்கருக்கு உரிய பிரிமியம் தொகை ரூ.496 விவசாயிகள் செலுத்தினால் போதும். இதேபோல் மணிலா பயிர் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.23 ஆயிரத்து 350 வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இதற்கான பிரிமிய தொகை ஏக்கருக்கு ரூ.422 செலுத்தினால் போதும். எனினும் நடப்பு சம்பா பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டுள்ள நெற் பயிருக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் காப்பீடு மேற்கொள்ள வேண்டும். இதனால் கடைசி நேரத்தில் சர்வரில் ஏற்படும் பதிவு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து முழுவதுமாக விடப்படலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story