கரும்பு வழங்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் கொண்டாட்டம்
கரும்பு வழங்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு வழங்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் திருநாளுக்கு ரேஷன்கடைகளில் பச்சரிசி,சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசுடன் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டது. இதற்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். விவசாய நல முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜெ.சிவா உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் முருகேஷை நேரில் சந்தித்து அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம் வழங்கினர்.