பம்பு செட்டுகளை குறி வைத்து வயர்களை திருடும் கும்பல்


பம்பு செட்டுகளை குறி வைத்து வயர்களை திருடும் கும்பல்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:45 AM IST (Updated: 23 Jun 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் பம்பு செட்டுகளை குறி வைத்து வயர்களை திருடும் கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் பம்பு செட்டுகளை குறி வைத்து வயர்களை திருடும் கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வயர்கள் திருட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள பம்பு செட்டுகளில் இரவு நேரங்களில் பம்பு செட்டுகளில் மர்மநபர்கள் புகுந்து மோட்டார்களுக்கு செல்லும் வயர்களை அறுத்து அதில் உள்ள செம்பு கம்பிகளை உரித்து திருடிச்செல்வது அதிகரித்துள்ளது.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். தளிக்கோட்டை பகுதி மட்டுமல்லாது அருகில் இருக்கும் உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், சம்பட்டிகுடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பம்பு செட்டுகளிலும் அடிக்கடி வயர் திருட்டு நடக்கிறது.

போலீசில் புகார்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தளிக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகளான ஏழுமலை, பாஸ்கரன், ஜெகதீசன், தாமோதரன் உள்ளிட்ட 6 விவசாயிகளின் பம்பு செட்டுகளில் மின்மோட்டாருக்கு செல்லும் வயர்களை அறுத்து அதில் உள்ள செம்பு கம்பிகளை திருடிச்ெசன்று விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாய தொழிலாளர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், இடுபொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். இது போன்று மின்வயர்களை திருடி பல ஆயிரம் ரூபாய் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் திருடர்களை பிடித்து வயர் திருட்டை தடுக்க வேண்டும்.

விரைந்து பிடிக்க வேண்டும்

இந்த பகுதி தஞ்சை, திருவாரூர் எல்லையில் உள்ளது. தஞ்சை மாவட்ட பகுதியில் இருந்து திருடர்கள் உள்ளே நுழைந்து வயர்களை திருடிவிட்டு தஞ்சை மாவட்ட பகுதிக்கு மீண்டும் சென்று விடுவதால் இரு மாவட்ட போலீசாரும் இணைந்து பம்பு செட் வயர்களை குறி வைத்து திருடும் கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story