விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் வட்டாரம் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாய ஆலோசனை குழு கூட்டம் ராதாபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. விவசாயிகள் ஆலோசனை குழுத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். பனை விதை மேம்பாட்டு திட்டம் பற்றி வேளாண்மை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன், தரிசு நிலமேம்பாட்டு திட்டம் பற்றி வேளாண்மை துணை இயக்குனர் டேனியல் சுந்தர் பாலஸ் ஆகியோர் விளக்கி கூறினர். வேளாண்மை மண்டல இயக்குனர் மீனாகுமாரி, விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

ராதாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுனில் தத், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் அஜிதா, பட்டு வளர்ப்புத்துறை செல்லையா, கால்நடை உதவி மருத்துவர் சத்திய பிரபா மற்றும் பலர் பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சரிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுபா செய்திருந்தார்.


Next Story