கிணற்றில் விவசாயி பிணம்


கிணற்றில் விவசாயி பிணம்
x

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஏராளம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் ராஜீவ் காந்தி (வயது 35). விவசாயி. கருத்துவேறுபாடு காரணமாக இவரும், இவரது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் அவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story