விவசாயி உயிரிழப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


விவசாயி உயிரிழப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

விவசாயி உயிரிழப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் போலீசார் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். விவசாயியின் உயிரிழப்புக்கு போலீசார் நடத்திய தாக்குதல்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாதது கண்டிக்கதக்கது.

விவசாயி செம்புலிங்கம் மற்றும் உறவினர்களை போலீசார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயன்றால் அதை பா.ம.க. வேடிக்கை பார்க்காது.

செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த செம்புலிங்கம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story