விவசாயி பலி்; சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்


விவசாயி பலி்; சிறுவன் உள்பட  6 பேர் படுகாயம்
x

விவசாயி பலி்; சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்

தஞ்சாவூர்

வல்லம்:

தஞ்சை அருகே நெல் குவியல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தார். சிறுவன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சிக்கு சென்றனர்

தஞ்சை அருகே உள்ள மருங்குளம்- திருக்கானூர்பட்டி சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இதன் அருகே சிலர் சாலையோரத்தில் நெல்லை கொட்டி காய வைத்து அதன் மீது தார்ப்பாயை போட்டு மூடி வைத்து இருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள வடசேரியில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு காரில் 7 பேர் சென்றனர். காரை அன்பரசன்(வயது45) என்பவர் ஓட்டினார்.

பரிதாப சாவு

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு எதிரே கார் வந்த போது சாலையோரத்தில் நெல்லை காயவைத்துள்ளது தெரியாமல் அருகே இருந்த பேரிகார்டில் காா் மோதி ெநல்குவியலில் கார் ஏறி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த வடசேரி நெம்மேலி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி(58)(விவசாயி) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த ராமமூர்த்தி(50), பாலமுருகன்(35), மாரிமுத்து (60), சங்கீதா(40), டிரைவர் அன்பரசன் (45), சிறுவன்

பிரிநீத்(5‌) ஆகியோா் படுகாயமடைந்தனர்.

விசாரணை

இதில் சங்கீதா உள்பட 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீ்்ட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான திருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story