உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது


உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உரம் வாங்கும் போது நானோ யூரியா வாங்க வற்புறுத்த கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

தேவகோட்டை,

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு உரக் கடைகளில் உரம் மூடை கேட்டால் நானோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடைக்காரர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஒரு உர மூடைக்கு ஒரு நானோ யூரியா பாட்டில் வாங்கினால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். நானோ யூரியாவை தெளியுங்கள் என்றால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1200 செலவாகும். குறைந்த பட்சம் 10 ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவு வருகிறது. யூரியாவில் உள்ள சத்து நானோ யூரியாவில் கிடையாது. இதில் அதிகப்படியான லாபம் உர நிறுவனங்களுக்குதான். விவசாயிகளுக்கு கிடையாது. எனவே, நானோ யூரியாவை விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி கொடுக்ககூடாது. விவசாயிகள் கேக்கும் உரங்களை மட்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story