நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு செல்ல சாலை வசதி - விவசாயிகள் வலியுறுத்தல்


நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு செல்ல சாலை வசதி - விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:45 AM IST (Updated: 20 Feb 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு செல்ல தற்காலிகமாக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மழை பெய்ததால் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை சிரமமின்றி எடுத்து செல்லும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சங்கர் கூறியதாவது:-

சேற்றில் சிக்கும் வாகனங்கள்

கணபதிபுரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வாகனங்களில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும்போது பாதி வழியில் சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொள்கிறது.

இதனால் வெகு தூரம் மூட்டைகளை தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.

சிரமமின்றி...

விவசாயி செந்தில்:-

இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் முழுவதும் இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொள்முதல் செய்யப்படும். இந்த நிலையில் சாலை மண்சாலையாக இருப்பதால் நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு செல்ல சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story