பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை


பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை
x

பாவூர்சத்திரம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் கழுநீர்குளம் ஊர் உள்ளது. இந்த ஊரின் வடக்கு பகுதியில் செட்டிகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று பழுதாகி பல நாட்கள் ஆகிறது. இதனை சரிசெய்வதற்காக மின்வாரியத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தற்போது நடுவை செய்துள்ள பல்லாரி, மிளகு செடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் செடிகள் கருகி வரும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின் வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story