தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க விவசாயிகள் கோரிக்கை
தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொறையாறு, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சாத்தனூர், சங்கரன்பந்தல், நல்லாடை, திருவிளையாட்டம், கடலி, மேமாத்தூர், செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், மேலையூர், காலகஸ்திநாதபுரம், கிடாரங்கொண்டான், தில்லையாடி, திருவிடைக்கழி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பயிர்களுக்கு தேவையான யூரியா, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தட்டுப்பாடின்றி உரம்
ஆகவே, குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் தட்டுபாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story