பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம்


பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம்
x

பருத்தியின் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் பருத்தியின் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பருத்தி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களில் ஆண்டுதோறும் பருத்தி விவசாயம் நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் பருத்தி விவசாயம் சீசன் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

இந்தநிலையில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய மல்லல், வடக்கு மல்லல், தாழியாரேந்தல், மட்டியாரேந்தல், கண்ணங்குடி கடம்போடை, ஆலங்குளம், பூசேரி உள்ளிட்ட பல கிராமங்களிலும் பருத்தி விவசாயம் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது. அதுபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சலும் நன்றாக உள்ளதாகவும், நல்ல விலையும் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

விலை குறைவு

இதுபற்றி முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறும்போது, கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் மிக குறைவுதான். விலையும் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி விளைச்சலும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே உள்ளது. சீசன் தொடங்கிய மாதங்களில் ஒரு கிலோ பருத்தி ரூ.80-க்கு விலை போனது.

கடந்த வாரம் வரையிலும் ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரையிலும் நல்ல விலை போனது. ஆனால் தற்போது திடீரென பருத்தியின் விலை குறைந்து ரூ. 80-க்கு போகின்றது. திடீரென விலை குறைந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. வியாபாரிகள் அவர்கள் நோக்கத்தில் விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story