நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள்
நீடாமங்கலம் வட்டாரத்தில் மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டாரத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கானூர் அன்னவாசல், பருத்திக்கோட்டை, மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி, அரிச்சபுரம், அனுமந்தபுரம், சித்தமல்லி மேல்பாதி, அதங்குடி, தேவங்குடி, சித்தாம்பூர், பெரம்பூர், ரிஷியூர், சோனாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பு விவசாயிகள் குவித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்தது. தற்போது மழை நின்று வெயில் அடித்து வருவதால் நனைந்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story