வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளைஅழைத்து செல்ல ஏற்பாடு


வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளைஅழைத்து செல்ல ஏற்பாடு
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நாளை தொடங்கும் வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைஞாயிறு வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

திருச்சியில் நாளை தொடங்கும் வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைஞாயிறு வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் கண்காட்சி

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் திருச்சியில் நாளை(வியாழக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை மாபெரும் வேளாண் கண்காட்சியான வேளாண் சங்கமம்-2023 என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தலைஞாயிறு வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளை வேளாண்மை துறை மூலமாக திருச்சிக்கு அழைத்து சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

இந்த கண்காட்சிக்கு செல்ல விருப்பமுள்ள தலைஞாயிறு பகுதி விவசாயிகள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்கிறேன். நாளை 50 விவசாயிகளும், 28-ந்தேதி 50 விவசாயிகளும், 29-ந்தேதி 50 விவசாயிகளும் கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 3 நாட்களும் காலை 5 மணிக்கு விவசாயிகளை திருச்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். கண்காட்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும்.

முன்பதிவு செய்ய வேண்டும்

மூன்று நாட்களில் 150 விவசாயிகள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.முன்பதிவு செய்ய 82200 32635, 90471 25997 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story