விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் அளித்தார். அதன்படி தெரு விளக்கு அமைத்து தருவது, மயான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தாய் சேய் நல கட்டிடம் அமைத்து கொடுப்பது, மாட்டுக்கொட்டகை அமைப்பது, பெரிய குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் உள்ள விவரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இதில், விவசாயிகள் 123 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


Next Story