விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.


Next Story