விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனத்துறை, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல வருடங்களாகவே காட்டுப் பன்றிகள் மலையை விட்டு கீழே இறங்கி வந்து விவசாய தோட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு, சோளம் உள்பட பல்வேறு விளை பொருட்களை தின்று அளித்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினரும், அதிகாரிகளும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரியுடன் கலந்து ஆலோசனை செய்துமுடிவு எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.