விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்தல், ஊருணி தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். விவசாயிகளின் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்துறை அலுவலர்கள் பதில் அளித்தனர். வட்டார வாரியாக விவசாயிகள் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக அரசு ரூ.132 கோடி வழங்கியுள்ளது. அந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் கிடைத்துவிடும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கண்மாய்களை தூர்வாரவும், கால்வாய்கள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் 3 கரும்பு விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.2.72 லட்சத்தை கலெக்டர் வழங்கினார். இதில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வேளாண் இணை இயக்குனர் தனுஷ்கோடி, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story