விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வேதாரண்யம் தாசில்தார் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story