விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முன்னோடி விவசாயி மணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மானங்கொண்டான்ஆறு, முள்ளியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் இந்த ஆகாயத்தாமரை செடிகளால் வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story