விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

சாத்தூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை இயக்குனர் சந்திரசேகரன், வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டு்ப்பன்றி மற்றும் மழையின்மையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும். குமாரலிங்கபுரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தபட்டு வருகிறது. அவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தபடும் போது நீர்நிலைகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். கூட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.Next Story