விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சிவகாசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் லோகநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் ஆனந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய தாலுகாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை கண்மாய்களில் மீன் பாசி ஏலம் விடுவது சம்பந்தப்பட்ட சங்க தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். அப்போது சங்க தலைவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க தேவையான ஏற்பாடு செய்யப்படும் என்று ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story