விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கின்றனர். எனவே கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைகூடம், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் தொர்பான கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் விவசாயிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story