விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுதுறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சாா்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் திருவாரூரை சேர்ந்த முன்னணி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.