விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிந்து தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜா, மீன்வளத்துறை ஆய்வாளர் கீதா மற்றும் வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு கிராமங்களுக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விவசாய விளை பொருட்களை காய வைப்பதற்கு உலர் கலம் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் ஒவ்வொரு துறையிலும் விவசாயத்திற்கு அரசு வழங்கக்கூடிய மானியங்கள் குறித்து விளக்கம் அளித்து அதிகாரிகள் பேசினர்.