விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் அனைத்து சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.