விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார்கள் லோகநாதன், ரெங்கசாமி, ராமச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 41 அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்வி களுக்கு விளக்கம் அளித்தனர். இதில் 29 விவசாயிகள் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story