வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்


வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
x

பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆகாயத்தாமரை செடிகள்

நீர்நிலைகளில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை மற்றும் வெங்காய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகளால் நீரோட்டம் பாதிக்கப்படும். நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதற்கென்று தனியாக ஒரு இயக்கமே நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் நடப்பாண்டு பல்வேறு சிறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சீராக தண்ணீர் பாய வழி செய்யப்பட்டு இருப்பதாக நீர்வள ஆதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.

தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் விவசாய பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்கள் ஏராளம் உள்ளன. இவை மழைக்காலங்களில் வடிகாலாகவும் பயன்படுகின்றன.

பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்கள்

மழை வெள்ளம் வடியவும், ஆறுகளில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் விரைந்து செல்லவும் வாய்க்கால்கள் உரிய பராமரிப்புடன் இருப்பது அவசியமாகும். இந்த நிலையில் பாசனத்துக்கு உதவும் வாய்க்கால்கள் பல புதர் மண்டி கிடப்பதாக டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இவற்றை தூர்வாரி ஆண்டு முழுவதும் முறையாக பராமரித்தால் விவசாயத்துக்கு தேவயைான தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு தூர்வாரப்பட்ட காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கோண கடுங்கால் வாய்க்காலில் திருக்காட்டுப்பள்ளி, கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக ஆகாயத்தாமரை செடிகள், கோரைப்புற்கள் அடர்ந்து வளர்ந்து, தண்ணீரே வெளியே தெரியாத நிலை உள்ளது.

பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு

இதனால் பருவ மழை காலங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விளையும் பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

கோணகடுங்கால் வாய்க்காலில் நெடுக வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கடைமடைவரை சீராக தண்ணீர் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story