சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள்
திருமருகல் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருமருகல் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்
ஆரம்ப காலங்களில் விவசாய நிலங்கள் வைத்திருந்த விவசாயிகளில் 99 சதவீதம் பேர் விவசாயம் செய்தனர். தற்போது போதிய பருவமழை இன்றி, நீர்நிலைகள் வறண்டு, ஆழ்குழாய் கிணறுகளிலும் நீரின்றி போனதால் விவசாயம் என்பது பொய்த்து போய்க்கொண்டே இருக்கின்றது. திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் பல இடங்களில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலையில், சில இடங்களில் மட்டும் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு பெரும்பாலானோர் சென்றுவிடுவதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
அதன்படி திருமருகல், அம்பல், பொறக்குடி, நரிமணம், திருப்புகலூர், போலகம், ஆலத்தூர், புத்தகரம், வாழ்குடி, விற்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர். தற்போது சம்பா நடவு பணிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்பா நடவு பணி தீவிரம் அடைந்துள்ளதுடன், வருகிற பொங்கலை சிறப்பாக கொண்டாடிட நெல் நடவு அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.