விவசாயிகள் நூதன பிரசாரம்
சாலையின் இருபுறமும் புளிய மரக்கன்றுகளை நட கோரி விவசாயிகள் நூதன பிரசாரம்
திருவண்ணாமலை
சாலை விரிவாக்கத்தின் போது சாலையின் இருபுறமும் புறம்போக்கு, தரிசு நிலங்களை கண்டறிந்து புளிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் அங்கிருந்த பொதுமக்களை கவரும் வகையில் தாலுகா அலுவலக வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கி எழுந்து பல் துலக்குவது போன்ற செய்து டீ குடித்து காண்பித்தனர்.
பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் சாலை விரிவாக்கத்தின் போது இருபுறமும் புளிய மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு கோஷங்கள் எழுப்பியப்படி ஊர்வலமாக சென்று அங்கு நடைபெற்று கொண்டிருந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேசிடம் புளிய மரக்கன்றுகளை வழங்கி கோரிக்கை மனு அளித்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.