நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதி விவசாயிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் சில நாட்கள் சரியாக இயங்கவில்லை. என்ன காரணம் என்று கேட்டால் அதிகாரிகள் சாக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். விவசாயிகளிடம் சாக்கு வாங்கி வருமாறு கூறுகின்றனர். எனவே உடனடியாக அந்த கொள்முதல் நிலையத்துக்கு தேவையான சாக்குகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story