நாகை தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பரபரப்பு
விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக நாகை அவுரித்திடலில் இருந்து விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளையும் மீறி, தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்வேளூர்-வேதாரண்யம்
இதேபோல் வேதாரண்யம் கே ட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவை சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்கள் சார்பில் திருக்குவளையில் கீழையூர் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை.மாலி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.